நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் தலைமையாசிரியர் நாகேந்திரன் தலைமையில் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், முன்னாள் மாணவர் சங்க பெரியசாமி, ஆனந்த் முன்னிலை வகித்தனர்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவர் லட்சுமி, துணைத் தலைவர் ஒய்யாலம்மாள், முன்னாள் மாணவர் சங்க பிரதிநிதியாக பெரியசாமி, கல்வியாளராக ஆசிரியர் செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டனர். 24 நிர்வாகக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். ஆசிரியை விமலா நன்றி கூறினார்.

