/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேர்தலும் ஆரத்தி தட்டுக்களும் தொடரும் பாரம்பரியம்
/
தேர்தலும் ஆரத்தி தட்டுக்களும் தொடரும் பாரம்பரியம்
ADDED : மார் 31, 2024 11:35 PM

திருப்புத்துார் : தேர்தல் காலத்தில் சிவகங்கை மாவட்ட கிராமங்களில் பிரசாரத்திற்கு வரும் வேட்பாளர்களை, அவர்கள் எந்தக் கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் பெண்கள் கூட்டமாகஆரத்தி எடுத்து வரவேற்பது வழக்கம்.
தட்டுக்களில் வெற்றிலை கரைசல், குத்துவிளக்கேற்றி, குடத்தில் விளக்கேற்றி... வித,விதமான ஆரத்திகள் எடுப்பதுஉண்டு. ஆரத்தி பெண்களின் வரவேற்பை ஏற்ற பின்னரே கிராமங்களில் வேட்பாளர் பிரசாரம் துவங்கும். இந்த ஆரத்தி எடுக்கும் பெண்களின் தட்டில் கட்சியினர் 'காணிக்கை' செலுத்தி கெளரவிப்பர். இது பல தேர்தல்களாக நடைபெறுகிறது.
தேர்தல் கமிஷனால் தடுக்க முடியாத தேர்தல் நடைமுறைகளில் இதுவும் ஒன்று. மக்களின் பாரம்பரிய கலாசாரத்துடன்தொடர்புடையது என்பதால் இதனை கட்சியினர் தவிர்க்க முடியாமல் பல யுக்திகளை கடைபிடித்து காணிக்கை வழங்குகின்றனர். லோக்சபா தொகுதி வேட்பாளர் பல 'லகரங்கள்' ஆரத்தி காணிக்கைக்காக தேர்தல் பட்ஜெட்டில் ஒதுக்குவது வழக்கம்.
முன்னர் ரூ.1ல் துவங்கி சட்ட சபைத் தேர்தல்களில் ரூ.100, 200ஐக் கூட தொட்டு விட்டது. நார்மலாக ரூ.50 கொடுப்பது வழக்கமாக உள்ளது. கிராமத்தினர் இந்த ஆரத்தி தட்டுக்களின் எண்ணிக்கையை வைத்தெல்லாம் வேட்பாளரின் வெற்றியை கணித்த காலமும் உண்டு.

