/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்
/
சிவகங்கையில் மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 29, 2024 05:39 AM

சிவகங்கை : அரசு ஊழியர் போன்றே மின்வாரிய ஊழியர்களுக்கும் குடும்ப நல நிதி ரூ.5 லட்சம் வழங்க வலியுறுத்தி சிவகங்கையில் மின்ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு (சி.ஐ.டி.யு.,) சார்பில், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயனை வழங்க வேண்டும். மின்விபத்தில் உயிரிழக்கும் ஊழியர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளர் ஆர்.கருணாநிதி தலைமை வகித்தார். சுப்புராம், ரமேஷ் பாபு, பாண்டி, மரிய செபஸ்தி முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் எஸ்.உமாநாத் கோரிக்கையை விளக்கினார். மாவட்ட பொருளாளர் வி.மோகனசுந்தரம் நன்றி கூறினார்.

