/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
'எலைட்' பள்ளி கட்டட நிதி வீண் தனியார் கட்டடத்தில் மாணவர் தவிப்பு
/
'எலைட்' பள்ளி கட்டட நிதி வீண் தனியார் கட்டடத்தில் மாணவர் தவிப்பு
'எலைட்' பள்ளி கட்டட நிதி வீண் தனியார் கட்டடத்தில் மாணவர் தவிப்பு
'எலைட்' பள்ளி கட்டட நிதி வீண் தனியார் கட்டடத்தில் மாணவர் தவிப்பு
ADDED : மே 18, 2024 01:39 AM
சிவகங்கை:தமிழக அளவில் கடந்த 3 ஆண்டிற்கு முன் துவக்கப்பட்ட 'எலைட்' பள்ளிகளுக்கு சொந்த கட்டடம் கட்ட மாவட்ட வாரியாக ஒதுக்கிய இடம், பல கோடி நிதி முடங்கி கிடக்கிறது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை உயர்கல்வி வாய்ப்புகளுக்கு தயார்படுத்த 3 ஆண்டிற்கு முன் மாவட்டம்தோறும் ஒரு 'எலைட்' பள்ளியை அரசு துவக்கியது. இப்பள்ளியில் 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் கிராமப்புற மாணவர்களை சேர்த்து, அவர்களுக்கு 'நீட்', 'ஜே.இ.இ.,' 'கியூட்' உட்பட 14 விதமான போட்டி தேர்வுக்கு தயார்படுத்துகின்றனர். ஒரு பள்ளிக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 24 முதல் 30 வரை உள்ளனர். இப்பள்ளிகள் மூலம் கடந்தாண்டு 1,200 மாணவர்கள் 'நீட்', 'கியூட்', ஜே.இ.இ., தேர்வு மூலம் தேசிய பல்கலை, உயர்கல்வி நிலையங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர். கனடா, சிங்கப்பூர் பல்கலைகளிலும் சேர்ந்துள்ளனர்.
'எலைட்' பள்ளிகளில் 680 மாணவ, மாணவிகள் தங்கி படிக்க தனித்தனி விடுதிகள், டிஜிட்டல் போர்டுடன் கூடிய ஏ.சி., வகுப்பறை, டிஜிட்டல் நுாலக வசதிகளுடன் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இன்று வரை பெரும்பாலான மாவட்டத்தில் 'எலைட்' பள்ளிக்கான கட்டடம் கட்டப்படவில்லை.
ரூ.60 கோடி ஒதுக்கீடு
கல்வித்துறை அதிகாரி கூறியதாவது: அனைத்து மாவட்டத்திலும் தலா ஒரு 'எலைட்' பள்ளி வீதம் துவக்கியுள்ளனர். இப்பள்ளிகளுக்கு கட்டடம் கட்ட 5.20 ஏக்கர் நிலம், ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டத்தில் மட்டுமே பள்ளிக்கு தனியாக கட்டடம் கட்டி வருகின்றனர் என்றார்.

