/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
துப்புரவு ஆய்வாளர் பணியிடம் உருவாக்க வலியுறுத்தல்
/
துப்புரவு ஆய்வாளர் பணியிடம் உருவாக்க வலியுறுத்தல்
ADDED : மார் 28, 2024 11:18 PM
திருப்புவனம் : திருப்புவனம் பேரூராட்சியில் துப்புரவு ஆய்வாளர் பணியிடம் உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்புவனம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 9 ஆயிரம் வீடுகளில் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். தினசரி ஆறு டன் குப்பை அள்ளப்படுகின்றன. சித்திரை, வைகாசி, ஆவணி மற்றும் திருவிழா காலங்களில் இரு மடங்கு குப்பை சேகரிக்கப்படும்,
இரண்டு மேஸ்திரிகள், 24 நிரந்தர துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 80 பணியாளர்கள் தினசரி ஆறு டன் குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து அழிக்க வேண்டும். இதுதவிர நகர்ப்புறங்களில் துாய்மை பணியை கண்காணிக்கவும் துப்புரவு ஆய்வாளர் வேண்டும், துப்புரவு ஆய்வாளர் இல்லாததால் கொரானோ காலம், தொற்று நோய் காலங்களில் போதிய தூய்மை பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. துப்புரவு ஆய்வாளர் இல்லாததால் பிறப்பு, இறப்பு உள்ளிட்டவை குறித்து எந்த வித விசாரணையும் இன்றி சான்று வழங்கப்படுகிறது.
திருப்புவனத்தில் புஷ்பவனேஸ்வரர் கோயில், மாரியம்மன் கோயில், புதூர், கோட்டை பள்ளி வாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்டவைகள் உள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இந்த இடங்களில் தூய்மை பணிகள் பெயரளவிலேயே நடைபெறுகிறது. மக்கள் தொகை குறைந்த இடங்களில் கூட துப்புரவு ஆய்வாளர் பணியிடம் உள்ள நிலையில் மாவட்டத்தில் அதிக வருவாயை ஈட்டி தரும் திருப்புவனத்தில் துப்புரவு ஆய்வாளர் பணியிடம் இல்லாததால் சுகாதார பணிகள் பாதிக்கப்படுகின்றன.

