/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி மாநகராட்சியில் டெண்டர் பதிவு பதிவேற்றாததால் ஊழியர் சஸ்பெண்ட்
/
காரைக்குடி மாநகராட்சியில் டெண்டர் பதிவு பதிவேற்றாததால் ஊழியர் சஸ்பெண்ட்
காரைக்குடி மாநகராட்சியில் டெண்டர் பதிவு பதிவேற்றாததால் ஊழியர் சஸ்பெண்ட்
காரைக்குடி மாநகராட்சியில் டெண்டர் பதிவு பதிவேற்றாததால் ஊழியர் சஸ்பெண்ட்
ADDED : பிப் 22, 2025 10:37 PM
காரைக்குடி : காரைக்குடி மாநகராட்சியில் முறையான அறிவிப்பின்றி டெண்டர் நடப்பதாக ஒப்பந்த காரர்கள் புகார் எழுப்பினர்.ஆன் லைனில் முறையாக பதிவு செய்யாத ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
காரைக்குடி மாநகராட்சியில் மழைநீர் வடிகால், சிறு பாலம் சீரமைத்தல், பேவர் பிளாக் தளம், மாநகராட்சி அலுவலகத்தில் துணை மேயர் அறை மற்றும் மாமன்ற கூட்ட அறை மராமத்து பணி, கழிப்பிடம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான டெண்டர் ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டது.
16 பணிகளில் 15 பணிகள் மட்டுமே ஆன்லைனில் வெளிவந்ததாக ஒப்பந்ததாரர்கள் புகார் கூறினர். இதில் ஒரு பணியான கழிப்பிடம் கட்டும் பணி பள்ளி காம்பவுண்ட் சுவரை உடைத்து தொடங்கி விட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இது சம்பந்தமாக மாநகராட்சி வரைவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:
ஆன்லைனில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 16 பணிகளில் ஒரு பணி விடுபட்டுள்ளது. அந்த ஒரு பணியும் மீண்டும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 16 பணிக்கும் ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்ட பிறகே டெண்டர் நடைபெறும். தவிர, டெண்டர் அறிவிக்காமல் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அளவீடு செய்வதற்கு சுத்தம் செய்யும் பணியே நடந்தது.
அளவீடு செய்தால் தான் பணியின் மதிப்பீட்டுத் தொகை அறிய முடியும். ஆன்லைனில் முறையாக பதிவேற்றம் செய்யாததால் சம்பந்தப்பட்ட ட்ராப்ட் மேன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றனர்.

