/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்கவும் * விவசாய சங்க கூட்ட தீர்மானம்

ADDED : செப் 07, 2024 05:33 AM
சிவகங்கை, செப்.7-சென்னை - காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என விவசாய சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
மானாமதுரையில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. கணேசன் தலைமை வகித்தார். இந்திய கம்யூ., மாநில துணை செயலாளர் பெரியசாமி, விவசாய சங்க மாநில பொது செயலாளர் பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ., தங்கமணி, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா, துணை செயலாளர் மருது, விவசாய சங்க மாவட்ட செயலாளர் காமராஜ், ஒன்றிய செயலாளர் சங்கையா, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் ராஜா பங்கேற்றனர். கூட்டத்தில் சென்னை - காரைக்குடி இடையே ஓடும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும். வேலை உறுதி திட்ட சம்பளத்தை ரூ.400 உயர்த்தி தர வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு அவசர பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். அனைத்து மகளிர் கல்லுாரியிலும் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும். மானாமதுரை வைகை ஆற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல் மரங்களை அகற்ற வேண்டும் என தீர்மானித்தனர். ////