ADDED : செப் 05, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை, : தேவகோட்டை தேபிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் திருவேகம்பத்துார் அரசு சுகாதார நிலையம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை சிகிச்சை அளித்தனர்.
முகாமை பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா தொடங்கி வைத்தார். தாளாளர் சேவியர்ராஜா முன்னிலை வகித்தார். திருவேகம்பத்துார் மருத்துவமனை கண் மருத்துவ உதவியாளர் மகேஸ்வரி, அரவிந்த் மருத்துவமனை டாக்டர் பிரியங்கா, ரெட்டி, முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், உதவி தலைமையாசிரியர்கள் விக்டர் டிசோசா, எட்வின் ரொசாரியோ, ஞான அலெக்ஸ் பங்கேற்றனர்.