/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாழ்வாகச் செல்லும் மின் கம்பி; விவசாயிகள் அச்சம்
/
தாழ்வாகச் செல்லும் மின் கம்பி; விவசாயிகள் அச்சம்
ADDED : ஜூலை 02, 2024 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி சதுர்வேதமங்கலம் ஊராட்சி கிழக்குப்பட்டி அருகே உள்ள வயல்வெளியிலும், கல்லம்பட்டி ஊராட்சி கரடிபட்டி செல்லும் வழியில் விவசாய நிலங்களிலும் மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. விவசாய காலங்களில் டிராக்டர்களை கொண்டு உழவுப் பணி மேற்கொள்ளும் போது விபத்து அபாயம் நிலவுகிறது. அப்பகுதிக்கு செல்ல விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட விவசாயிகள் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் இந்த இரு கிராமங்களிலும் வயல் வழியாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.