/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விவசாயிகள் பதிவு எண் சேவை மையங்களிலும் பதியலாம்
/
விவசாயிகள் பதிவு எண் சேவை மையங்களிலும் பதியலாம்
ADDED : மார் 05, 2025 06:19 AM
திருப்புத்துார்: விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண்ணுக்கான பதிவை பொதுச்சேவை மையங்களிலும் விவசாயிகள் பதியலாம்.
விவசாயிகள் தனித்துவ 11 இலக்க அடையாள எண் பெறுவதற்கான பதிவு நடைபெற்று வருகிறது. மாநிலம் வாரியாக ஒருங்கிணைக்கப்பட்ட விவசாயிகள் தரவு தளத்தில் பதிவு செய்யப்படுகிறது.
அரசின் மானிய திட்டங்கள், பலன்களை விவசாயிகள் எளிதாக பெறுவதற்கும், வேளாண் சேவை பெறுவதற்காகவும் விவசாயிகளுக்கு ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. பதிவிற்கு விவசாயிகள் 10(1) நில ஆவணம், ஆதார் நகல் மூலம் பதிவு நடைபெற்று வருகிறது. பதிவிற்கான கடைசி நாளாக மார்ச் 31 அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு ஊராட்சிகளில் முகாம்கள் மூலம், வேளாண் அலுவலகம் மூலம் பதிவு செய்யப்பட்டது. தற்போது கூடுதலாக பொதுச்சேவை மையங்களிலும் பதிவு செய்யும் வசதி துவங்கியுள்ளது.