/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வியாபாரிகளாக மாறும் விவசாயிகள்; சாகுபடி வெகுவாக குறையும் அபாயம்
/
வியாபாரிகளாக மாறும் விவசாயிகள்; சாகுபடி வெகுவாக குறையும் அபாயம்
வியாபாரிகளாக மாறும் விவசாயிகள்; சாகுபடி வெகுவாக குறையும் அபாயம்
வியாபாரிகளாக மாறும் விவசாயிகள்; சாகுபடி வெகுவாக குறையும் அபாயம்
ADDED : மார் 06, 2025 05:22 AM

திருப்புவனம் வட்டாரத்தில் நெல், வாழை, தென்னை, கரும்பு, வெற்றிலை, கத்தரி, வெண்டை சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பயிரையும் பயிரிட்டு மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடங்கள் வரை பராமரித்து அதன்பின் அறுவடை செய்து விற்பனை செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும், அதிலும் நோய் தாக்குதல், வறட்சி, சீதோஷ்ண மாற்றம் என எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தால் தான் உரிய லாபம் கிடைக்கும்.
ஆனால் வியாபாரத்தில் அப்படி இல்லை. மதுரை மார்க்கெட்டிற்கு சென்று பொருட்களை வாங்கி அந்தந்த ஊர் சந்தைக்கு சென்று விற்பனை செய்தால் அன்றைய தினமே லாபம், நஷ்டம் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு நாள் நஷ்டம் என்றாலும் மறுநாள் சந்தையில் ஈடுகட்டி விடலாம் என்பதால் பெரும்பாலான விவசாயிகள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆவரங்காடு, திருப்பாச்சேத்தி, தி.புதுார் பகுதிகளில் இருந்து மட்டும்தான் அதிகளவு வியாபாரிகள் சந்தைகளில் கடை போடுவது வழக்கம், தற்போது செங்குளம், பறையங்குளம், பழையனுார் உள்ளிட்ட பகுதி விவசாயிகளும், வியாபாரத்தில் இறங்கி விட்டனர்.
முக்குடி, செங்குளம் பறையங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காய சாகுபடி 150 ஏக்கரில் செய்யப்பட்டது. தற்போது பெயரளவிற்கு தான் நடைபெறுகிறது.
சொக்கநாதிருப்பு கத்தரிக்காய் என்றாலே பெயர் பெற்றது. தற்போது அதுவும் குறைந்து விட்டது. பட்டுரோஸ், மல்லிகை பூ, இட்லி பூ உள்ளிட்ட மலர் சாகுபடியும் குறைந்து விட்டது. விவசாயிகள் பலரும் வியாபாரிகளாக மாறியது தான் சாகுபடி பரப்பளவு குறைவதற்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.