/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் பருவமழை ஏமாற்றம் எதிரொலி விதை நெல் வாங்க ஆர்வம் காட்டாத விவசாயிகள்
/
திருப்புவனத்தில் பருவமழை ஏமாற்றம் எதிரொலி விதை நெல் வாங்க ஆர்வம் காட்டாத விவசாயிகள்
திருப்புவனத்தில் பருவமழை ஏமாற்றம் எதிரொலி விதை நெல் வாங்க ஆர்வம் காட்டாத விவசாயிகள்
திருப்புவனத்தில் பருவமழை ஏமாற்றம் எதிரொலி விதை நெல் வாங்க ஆர்வம் காட்டாத விவசாயிகள்
ADDED : செப் 12, 2024 04:50 AM
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் போதிய விதை நெல் இருப்பு இருந்தும் மழை இல்லாததால் விவசாயிகள் ஆர்வம் காட்டாதது அதிகாரிகளிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
வைகை பாயும் திருப்புவனம் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி ஆகஸ்ட் தொடக்கத்திலேயே பம்ப்செட் வைத்துள்ள விவசாயிகள் நாற்றங்கால் அமைத்து பணிகளை தொடங்கி விடுவார்கள், மழையை நம்பி பயிரிடும் விவசாயிகள் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பை கணக்கிட்டு பணிகளை தொடங்குவார்கள், திருப்புவனம் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி பத்தாயிரம் ஏக்கரில் நெல் நடவு பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கோடை மழையும் குறிப்பிட்ட அளவு பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழையும் போதிய அளவு பெய்யுமா என தெரியவில்லை.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் வைகை அணையில் உள்ள நீர் இருப்பு, சிவகங்கை மாவட்டத்திற்கு எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்பது உள்ளிட்ட எந்த வித அறிவிப்புகளும் இதுவரை இல்லை. மழை பெய்தால் ஓரளவிற்கு நாற்றங்கால் அமைத்து விதை நெல் துாவலாம், ஆனால் மழையும் பெய்யவில்லை.
திருப்புவனம் வட்டார வேளாண் அலுவலகத்தில் என்.எல்.ஆர்., கோ 51 (எப் 1), கோ 51 உள்ளிட்ட மூன்று ரகங்கள் 60டன் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 39 டன் விதை நெல்தான் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் 21 டன் இருப்பு உள்ளது. மழை பரவலாக பெய்து கண்மாய்களிலும் நீர் இருந்தால் அனைத்து விவசாயிகளும் நெல் நடவு பணிகளில் ஈடுபடுவார்கள்.
விவசாயிகள் தரப்பில் கூறுகையில்: கண்மாய்களில் ஆடு, மாடு குடிக்க கூட தண்ணீர் இல்லை. பிரமனுார், மாரநாடு கண்மாய்களில் ஓரளவிற்கு தண்ணீர் உள்ளது. விவசாயத்திற்கு பத்து நாட்களுக்கு கூட அந்த தண்ணீர் போதுமானதாக இருக்காது, மேலும் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. நாற்றங்காலை பன்றிகளை இரவு நேரத்தில் சேதப்படுத்துகின்றன.
கடன் வாங்கி பயிரிட்டு கடன்காரனாக மாறியதுதான் மிச்சம், பன்றிகளை ஒழித்தாலே பெரும்பாலான விவசாயிகள் நெல் நடவு பணிகளில் தயக்கமின்றி ஈடுபடுவார்கள், திருப்புவனம் வட்டாரத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை 20 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு பணிகள் நடந்தன. தற்போது 50 சதவிகிதம் குறைந்து விட்டது.
இந்தாண்டு இதுவும் குறைய வாய்ப்புண்டு தண்ணீர் இருப்பை பொறுத்துதான் விவசாயிகள் நெல் நடவு பணியில் ஈடுபடுவார்கள், கண்மாய்களில் நீர் இருப்பு இல்லாத நிலையில் தொடர்ந்து மழை பெய்யாவிட்டால் பலத்த நஷ்டம் ஏற்படும், என்றனர்.