/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷனில் கைவிரல் ரேகை பதிவு; பொருட்கள் வழங்க மறுப்பதாக புகார்
/
ரேஷனில் கைவிரல் ரேகை பதிவு; பொருட்கள் வழங்க மறுப்பதாக புகார்
ரேஷனில் கைவிரல் ரேகை பதிவு; பொருட்கள் வழங்க மறுப்பதாக புகார்
ரேஷனில் கைவிரல் ரேகை பதிவு; பொருட்கள் வழங்க மறுப்பதாக புகார்
ADDED : ஆக 29, 2024 11:29 PM

காரைக்குடி : காரைக்குடி அண்ணா நகரில் ரேஷன் கார்டுதாரர்களிடம் கைரேகை பெற்றுக் கொண்டு பொருட்கள் இல்லை என்று திருப்பி அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது.
காரைக்குடி தாலுகாவில்143 ரேஷன் கடைகள் மூலம் 91 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்டுதாரர்களுக்கு, அரிசி பருப்பு,சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் பயோ மெட்ரிக் முறை கொண்டுவரப்பட்டது.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர் கைரேகை பதிவு செய்தால்மட்டுமே பொருட்கள் பெற முடியும் என்ற நிலை வந்தது. ஆனாலும் காரைக்குடியில் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
காரைக்குடி மாநகராட்சி அண்ணாநகர் மாதவன் தெருவில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்து 200 ரேஷன் கார்டுகள் உள்ளன.அதிக கார்டு தாரர்கள் உள்ளதால் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறி, கடையை இரண்டாகப் பிரித்து இருகடைகளாக மாற்ற வேண்டுமென மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த ரேஷன் கடையில் மக்களிடம் கைரேகை பதிவு பெற்றுக்கொண்டு, பொருட்கள் முறையாக வழங்குவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
7 வார்டு கவுன்சிலர் குருபாலு கூறுகையில், அதிக கார்டுகள் உள்ளதால்பொருட்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. தற்போது கைரேகை பதிவு பெற்றுக்கொண்டு பொருட்கள் இல்லை, பிறகு வாருங்கள் என்று கடை பணியாளர்கள் அனுப்பி வைப்பதால், மீண்டும் மீண்டும் வயதானவர்கள் கடைக்கும் வீட்டிற்கும் அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது.அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டபோது மீண்டும் அழைப்பதாக கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.