/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செண்பகம்பேட்டையில் மீன்பிடி திருவிழா
/
செண்பகம்பேட்டையில் மீன்பிடி திருவிழா
ADDED : மார் 03, 2025 07:15 AM

கீழச்சிவல்பட்டி : செண்பகம்பேட்டை புதுக்கண்மாய் மீன்பிடிவிழாவில் திரளாக கிராமத்தினர் மீன் பிடித்தனர்.
கோடைகாலம் துவங்கியதும் வற்றத்துவங்கும் கண்மாய்களில் கிராமத்தினர் மீன்பிடி விழாக்களை நடத்தி வருகின்றனர். கிராமங்களுக்கு வருவாய் ஏற்படுத்தும் வகையில் கட்டணம் செலுத்தி மீன் பிடிக்க அனுமதிக்கின்றனர். நேற்று செண்பகம்பேட்டை புதுக்கண்மாயில் ஊத்தாக் கூடையை வைத்து மீன் பிடிக்க ரூ. 200 கட்டணமாக வசூலித்தனர். கிராமத்தினர் ஊத்தா மூலம் மீன் பிடித்தனர். இதில் விரால் பாப்புலெட், சிசி, போன்ற பெரிய மீன்கள், கெண்டை,கெழுத்தி, ஜிலேபி,குரவை மீன்களும் சிக்கன.
தொடர்ந்து அனைவருக்கும் அனுமதி அளிக்க வலை, பரி, கச்சா போன்றவற்றை வைத்தும் மீன் பிடித்தனர். எதிர்பார்த்த அளவில் மீன்கள் கிடைக்கவில்லை.