/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெய் வியாபாரி கொலை ஐந்து பேர் கைது
/
நெய் வியாபாரி கொலை ஐந்து பேர் கைது
ADDED : மே 24, 2024 02:37 AM
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே மாத்துாரில் நெய் வியாபாரி முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பாச்சேத்தி அருகே மாத்துாரைச் சேர்ந்த நெய் வியாபாரி வேல்முருகன் 51, குழந்தையில்லாததால் உறவினர் மகன் விஜய் என்பவரை வளர்த்து சகோதரி மகள் பவித்ரா என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளார். குடும்ப பிரச்னையில் பவித்ரா தற்கொலை செய்ததால், விஜய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார்.
ஆத்திரத்தில் இருந்த பவித்ராவின் சகோதரர் வேல்பாண்டி 27, சமயதுரை, வேலீஸ்வரன் 17, சிவபாலமுருகன், ஆசை முத்து, சிங்கமுத்து மே 16ம் தேதி வேல்முருகனை வீடுபுகுந்து வெட்டி கொலை செய்தனர். போலீசார் வேல்பாண்டி, சமயதுரை, வேலீஸ்வரன், சிவபாலமுருகன், சிங்கமுத்து ஆகிய ஐந்து பேரை கைது செய்து ஆசைமுத்துவை தேடி வருகின்றனர்.