/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாடக்கோட்டையில் நாளை பூச்சொரிதல் விழா
/
மாடக்கோட்டையில் நாளை பூச்சொரிதல் விழா
ADDED : மே 29, 2024 05:36 AM

இளையான்குடி, : மாடக்கோட்டை முனீஸ்வரர் கோவில் வைகாசி உற்ஸவ விழா கடந்த 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
முக்கிய நிகழ்ச்சியாக நாளை சாத்தமங்கலத்திலிருந்து பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து பூச்சொரிதல் விழா,31ம் தேதி சாத்தமங்கலம் விநாயகர் கோவிலிலிருந்து பக்தர்கள் பால்,ரத, பறவை, மயில், இளநீர், பன்னீர் காவடிகள் எடுத்து வந்து கோவில் முன் பூக்குழி இறங்க உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாடக்கோட்டை முனீஸ்வரர் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரம் நடக்க உள்ளது.
பின்னர் அபிஷேக, ஆரானைக்கு பின் மகா உற்ஸவம் நடைபெற உள்ளது. 1ம் தேதி அதிகாலை ஆடு,கோழிகளை பலியிட்டு பக்தர்கள் சுவாமியை வழிபட உள்ளனர்.