/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா
/
முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா
ADDED : பிப் 25, 2025 06:48 AM

சிவகங்கை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே கொண்டாடப்பட்டது.
மாவட்ட செயலாளர்செந்தில்நாதன் எம்.எல்.ஏ.,தலைமை வகித்து ஜெ., படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நகர் செயலாளர் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.,நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, சேவியர்தாஸ், சிவாஜி, ஸ்டீபன் அருள்சாமி, கோபி, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் கோட்டையன், அசோக்குமார், செந்தில்முருகன், குழந்தை, மண்டல தகவல்தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சங்கர் ராமநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைத்தலைவர் வக்கீல் ராஜா, ஜெயகுமார், ஜெயசந்திரன், மாரி, நவநீதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க., சார்பில் தாய் இல்லம், இந்திராநகர் கண்பார்வை குறையுடையோர் பள்ளி, புலியடிதம்பம் இயேசு வனத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிக்கான இல்லம் உள்ளிட்ட பகுதியில் உணவு வழங்கப்பட்டது.
* இளையான்குடியில் நகர, ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ஜெ. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜன், நகரச் செயலாளர் நாகூர் மீரா, ஒன்றிய செயலாளர்கள் பாரதிராஜன், கோபி, ஜெகதீஸ்வரன் நிர்வாகிகள் அப்துல் குலாம், அபூபக்கர், செய்யது இப்ராஹிம் கலந்து கொண்டனர்.
* தேவகோட்டையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் தேவகோட்டை அலுவலகத்தில் ஜெ. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேவகோட்டை நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ராமச்சந்திரன்தலைமையில் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஜெ. படத்திற்கு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், துணை தலைவர் ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிர்லா கணேசன், மாவட்ட ஜெ. பேரவை துணை செயலாளர் கார்த்திகேயன், இலக்கிய செயலாளர் முத்துராமலிங்கம் நிர்வாகிகள் பங்கேற்றனர்.