/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசியல் கட்சிகள் மீது தாக்குதல் முன்னாள் அமைச்சர் பேச்சு
/
அரசியல் கட்சிகள் மீது தாக்குதல் முன்னாள் அமைச்சர் பேச்சு
அரசியல் கட்சிகள் மீது தாக்குதல் முன்னாள் அமைச்சர் பேச்சு
அரசியல் கட்சிகள் மீது தாக்குதல் முன்னாள் அமைச்சர் பேச்சு
ADDED : மார் 31, 2024 06:46 AM
சிவகங்கை : சிவகங்கையில் நடந்த இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது:
பிரதமர் மோடி அரசு 10 ஆண்டு கால ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டும் ஒரு கோடியே 45 லட்சம் வரியை ரத்து செய்துள்ளது. காங்., ஆட்சியான 2004 முதல் 2014 வரை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 100நாள் வேலை திட்டம், 60 ஆயிரம் கோடி விவசாய கடன் ரத்து, அனைத்து கிராமத்திலும் வங்கி என மக்களுக்கு பயன் பெறும் திட்டங்கள் வழங்கிய அரசு காங்., அரசு.
அதன் பின் வந்த மோடி அரசு 10 ஆண்டு கால ஆட்சியில் அரசியல் கட்சிகள் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 2 முதல்வர் உள்ளிட்ட பல மாநில அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். அடுத்த முறை தேர்தல் நடக்குமா என்ற நம்பிக்கை எனக்கு குறைந்து வருகிறது.
மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்து விட்டால் அவர்தான் நிரந்தர பிரதமர். அடுத்த முறை தேர்தல் நடக்காது.
சுதந்திரம் இருக்காது. சுதந்திரம் இருக்கும்போது பாதுகாக்க வேண்டும். சுதந்திரம் இல்லாத போது பாதுகாக்க முடியாது என்றார்.

