/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முன்னாள் பிரதமர் பிறந்த நாள் விழா
/
முன்னாள் பிரதமர் பிறந்த நாள் விழா
ADDED : ஆக 21, 2024 07:39 AM
சிவகங்கை : சிவகங்கை காங்., சார்பில் எம்.பி., அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்தநாள் விழா அவரது படத்திற்கு முன்பு கட்சி நிர்வாகிகள் மலர்துாவி நல்லிணக்கநாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன் தலைமை வகித்தார். நகர் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். வட்டார தலைவர் மதியழகன், வட்டார பொறுப்பாளர் உடையார், மாவட்ட மகளிர் காங்., தலைவி இமயமடோனா, மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கியசாந்தாராணி, பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருப்புத்துார்: திருப்புத்துாரில் நகர் காங்., அலுவலகத்தில் நகர் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். வட்டார தலைவர் பிரசாத் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கணேசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர். ராஜிவ் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
கீழச்சிவல்பட்டியில் ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக் பள்ளியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தாளாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். முதல்வர் பழனியப்பன் வரவேற்றார். செயலர் குணாளன் முன்னிலை வகித்தார். கண்ணதாசன் இலக்கிய பேரவை சோலையப்பன் சிறப்புரையாற்றினார்.கட்டுரைப் போட்டியில் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

