ADDED : ஆக 20, 2024 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அருகே நாட்டாகுடி கால்வாயில் கோழி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதாக கிராமத்தினர் புகார் தெரிவித்தனர்.
சிவகங்கை அருகே நாட்டாகுடியில் 100 குடும்பம் வரை வசிக்கின்றன. இக்கிராம ரோட்டோரத்தில் உள்ள கால்வாயில் கோழி கழிவுகளை கொட்டிவைத்துள்னர். இதனால் கிராமத்தில் துர்நாற்றம் வீசுவதோடு,நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கோழி கழிவுகள் கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.