ADDED : ஆக 29, 2024 11:37 PM

சிவகங்கை, : சிவகங்கை அருகே வெற்றியூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் மாணவர் ரூ.27 லட்சம்செலவில் வழங்கிய பஸ் போக்குவரத்தை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்.
இப்பள்ளியில் வெற்றியூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 184 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிக்குஅரசு பஸ் போக்குவரத்து இல்லாததால், பள்ளிக்கு வந்து செல்வதில் மாணவர்கள் சிரமம் அடைந்தனர்.
இதை தவிர்க்கும் நோக்கில், பள்ளி மாணவர்கள் அனைவரையும் அழைத்து வரும்நோக்கில், முன்னாள்மாணவர் டாக்டர் முருகேசன் - ஜெயலட்சுமி தம்பதியினர் ரூ.27 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு ஒரு பஸ்சை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
இந்த பஸ் போக்குவரத்தை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர்செல்வம் வரவேற்றார். மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சரஸ்வதி அண்ணா, மாவட்ட கல்வி அலுவலர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உதவி தலைமை ஆசிரியர் இளமாறன் நன்றி கூறினார்.

