/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விவசாயிகளுக்கு இலவச வேப்பங்கன்று; இணை இயக்குனர் தகவல்
/
விவசாயிகளுக்கு இலவச வேப்பங்கன்று; இணை இயக்குனர் தகவல்
விவசாயிகளுக்கு இலவச வேப்பங்கன்று; இணை இயக்குனர் தகவல்
விவசாயிகளுக்கு இலவச வேப்பங்கன்று; இணை இயக்குனர் தகவல்
ADDED : ஆக 19, 2024 12:32 AM
சிவகங்கை : மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு இலவச வேப்பங்கன்று வழங்கப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமிபிரபா தெரிவித்தார். அவர் கூறியதாவது: விவசாயிகளுக்கு இலவசமாக வேப்பங்கன்று வழங்க, வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ளது. ஒரே பயிர்களை சாகுபடி செய்வதாலும், அதிகளவில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதாலும், மண்வளம் குறைந்தும், நுண்ணுயிர்கள் எண்ணிக்கை குறைந்து விடுகிறது. வேப்பம் இலைகள் நல்ல பசுந்தழை உரமாகும்.
ஆசாடிராக்டின் என்னும் மூலப்பொருளை கொண்ட வேம்பிலிருந்து கிடைக்கும் பொருட்களால் வேப்பம் எண்ணெய் தெளிப்பதின் மூலம் பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோயிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதுடன், சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் காக்கும். வேம்பினை பரவலாக்கம் செய்திட இம்மாவட்டத்திற்கு 35 ஆயிரம் வேப்ப மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. ஒரு ஏக்கரில் அடர்வு முறையில் நடவு செய்ய 200 கன்றுகள் தேவை. வரப்பில் நடுவதற்கு 60 கன்று வழங்கப்படும், என்றார்.

