ADDED : மே 08, 2024 05:41 AM
மானாமதுரை, : மானாமதுரையில் தற்போது கடும் கோடை வெயில் கடுமையாக உள்ள நிலையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான கோடை வெயில் அடித்து வருகிறது.வெயில் காரணமாக வீட்டிற்குள் இருக்க முடியாத அளவிற்கு புழுக்கமாக உள்ளது. மின்விசிறிகள் மற்றும் ஏர் கூலர்கள், ஏ.சி., போன்றவற்றை பயன்படுத்தினால் கூட வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
தற்போது அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் வீட்டிற்குள் இருக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மின்வாரியத்தினர் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,கோடை வெயிலின் தாக்கத்தால் மின் தேவை அளவு அதிகரித்துள்ளது. அடிக்கடி டிரான்ஸ்பார்மர்களில் பழுது ஏற்படுவதால் ஒரு சில நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. அதனை உடனே சரி செய்து வருகிறோம் என்றனர்.

