/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் அடிக்கடி மின்வெட்டு
/
மானாமதுரையில் அடிக்கடி மின்வெட்டு
ADDED : மே 13, 2024 12:28 AM
மானாமதுரை: மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும்வெயில் அடித்து வருகிற நிலையில் பொதுமக்கள் பேன், ஏசி., ஏர் கூலர் சாதனங்களை நீண்ட நேரம் இயக்குவதால் மின் தேவை அதிகரித்து வருகிறது.
மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருவதாக பொதுமக்களும், தொழிற்சாலை உரிமையாளர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: மின்இணைப்பிற்கு போதிய மின்சப்ளை செய்வதற்கான போதிய துணை மின் நிலையம் இல்லை. அடிக்கடி மின்வெட்டால் வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் மின்சாதனங்கள் சேதமாகி வருகின்றன. தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.