/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை, இளையான்குடியில் விநாயகர் சிலை வழிபாடு
/
மானாமதுரை, இளையான்குடியில் விநாயகர் சிலை வழிபாடு
ADDED : செப் 08, 2024 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை இளையான்குடியில் 45க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
மானாமதுரை, இளையான்குடி பகுதி பா.ஜ., ஹிந்து முன்னணி விநாயகர் சிலைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டது. மாலை சிலைகளுக்கு பூஜைகள் நடைபெற்றது.
இளையான்குடி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. இன்று காலை விநாயகர் சிலைகளுக்கு பூஜை நடத்திய பிறகு அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ள சிலைகளை ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்களில் கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்க உள்ளனர்.