/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரி வந்த விநாயகர் சிலைகள்
/
சிங்கம்புணரி வந்த விநாயகர் சிலைகள்
ADDED : ஆக 22, 2024 02:48 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரிக்கு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்காக திண்டிவனத்தில் ரசாயன கலப்பின்றி தயாரான விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டன.
சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 45 க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடக்கவுள்ளது. இதற்காக இந்து முன்னணி சார்பில் திண்டிவனத்தில் கிழங்கு மாவு, பேப்பர் கூழ் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகள் கொண்டுவரப்பட்டு அனைத்து ஏரியாக்களுக்கும் அனுப்பப்பட்டது. 3 முதல் 10 அடி வரையிலான சிலைகள் நகர் பகுதி மற்றும் சிவபுரிபட்டி, மட்டிக்கரைப்பட்டி,
மணப்பட்டி, கோவில்பட்டி, வேங்கைப்பட்டி, ஓசாரிபட்டி, வேட்டையன்பட்டி, அரசினம்பட்டி இடங்களுக்கு அனுப்பப்பட்டது. இந்நகரில்
விநாயகர் சதுர்த்தி முடிந்து 3 ம் நாள் விஜர்சன ஊர்வலம் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.