ADDED : ஆக 29, 2024 05:18 AM
காரைக்குடி: குன்றக்குடி அருகேயுள்ள பாதரக்குடி திட்டு மலைக்காளி கோயில் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு கார் மற்றும் பைக்கில் நின்று கொண்டிருந்த சிலர் போலீசை பார்த்ததும் தப்பி ஓடினர்.
சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் நின்ற பகுதி பாலத்தின் கீழே சென்று பார்த்த போது, 62 பண்டல்களில் 124 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட, விஜயவாடாவைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து ஒரு கார், பைக் மற்றும் 5 அலைபேசி மற்றும் 124 கிலோ கஞ்சாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்தனர்.
மேலும், இக்கடத்தலில் சம்பந்தப்பட்ட முக்கிய நபரான திருச்சி தில்லை நகர் ரகுமானியா புரத்தைச் சேர்ந்த குலாம் முகமது மகன் அப்துல் ரகுமான் 23 என்பவரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அதைத் தொடர்ந்து கடத்தலில் சம்பந்தப்பட்ட காரைக்குடி காளவாய்பொட்டல் முத்து இருளாண்டி மகன் திருப்பதி 23, அருணாச்சலம் மகன் மணிவாசகம் 21, சரவணன் மகன் விமல் ராஜ் 22 ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

