ADDED : ஆக 13, 2024 12:13 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 2024ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 8 அரசு பள்ளி மாணவர்களுக்கு சிவகங்கை எம்.எல்.ஏ., செந்தில்நாதன் ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் அமிர்தவள்ளி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை மாரிமுத்து முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ., செந்தில்நாதன் மாணவன் தவகுருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
முன்னதாக சக்கந்தி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் மூவேந்தன், அரசனுார் அரசு மேல்நிலைப் பள்ளி சுபி, கீழக்கண்டனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி அஜய், மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி அழகியமீனாள், பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மெய்மொழி, வேம்பத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி துளசிபிரியா, இடைக்காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி சிவரஞ்சனி உள்ளிட்ட மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கினார்.
நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் செல்வமணி, கருணாகரன், சேவியர், கோபி, ஜெ.பேரவை செயலாளர் இளங்கோவன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் குழந்தை கலந்துகொண்டனர்.

