/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெண் குழந்தை பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு
/
பெண் குழந்தை பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு
ADDED : ஆக 10, 2024 06:13 AM

சிவகங்கை : சிவகங்கையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பள்ளி சிறுமிகளுக்கான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி இ.பக்தவச்சலு தலைமை வகித்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் பரமேஸ்வரி முன்னிலை வகித்தார். கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஆப்ரின் பேகம் வரவேற்றார்.
நீதித்துறை நடுவர் ஜெ.அனிதா கிறிஸ்டி, மதுரை செல்லமுத்து அறக்கட்டளை இயக்குனர் ஜனார்த்தனன், பாதுகாப்பு அலுவலர் ராமசந்திரன், சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் பாண்டி கண்ணன் உள்ளிட்டோர் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் குறித்து விளக்கம் அளித்தனர்.
சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாகஉதவியாளர் பானுமதி நன்றி கூறினார்.