/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாயமங்கலத்தில் பங்குனி பொங்கல் துவக்க;ம் வாரச்சந்தையில் ஆடு, கோழி விலை உயர்வு

ADDED : மார் 28, 2024 11:25 PM

மானாமதுரை, : தாயமங்கலத்தில் பங்குனி பொங்கல் விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியதை தொடர்ந்து மானாமதுரை வாரச்சந்தையில் ஆடு,கோழிகளின் விலை உயர்ந்துள்ளது.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. பொங்கல் விழா ஏப்.4ல் நடைபெற உள்ளது. விழாவிற்கு தமிழகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் வந்திருந்து ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வழிபட்டுச் செல்வர்.
நேற்று மானாமதுரையில் நடைபெற்ற வாரச்சந்தையில் ஆடு,கோழிகளை வாங்க ஏராளமான பக்தர்கள் வந்திருந்த நிலையில் திருவிழா காரணமாக அவற்றின் விலை உயர்ந்து காணப்பட்டது. வழக்கம்போல் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்கப்படும் ஆடு ஒன்று நேற்று ரூ. 6 ஆயிரத்திற்கும், ரூ.500க்கு விற்பனை செய்யப்படும் கோழி ஒன்று ரூ. 600 என விற்பனை செய்யப்பட்டது.
வியாபாரி முருகன்: தாயமங்கலத்தில் பங்குனி பொங்கல் விழா துவங்கியதை தொடர்ந்து ஏராளமானோர் ஆடு, கோழிகளை பலியிடுவதால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது. ஆடு ஒன்றுக்கு ரூ. ஆயிரம் வரைக்கும், கோழி ஒன்றுக்கு ரூ.100லிருந்து ரூ.200 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போன்று அடுத்து வரும் 2 வாரங்களுக்கும் விலை கூடுதலாக விற்பனை செய்யப்படும் நிலை உள்ளதாக தெரிவித்தார்.