/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானியத்தில் மா, பலா எலுமிச்சை கன்று: உதவி இயக்குனர் தகவல்
/
மானியத்தில் மா, பலா எலுமிச்சை கன்று: உதவி இயக்குனர் தகவல்
மானியத்தில் மா, பலா எலுமிச்சை கன்று: உதவி இயக்குனர் தகவல்
மானியத்தில் மா, பலா எலுமிச்சை கன்று: உதவி இயக்குனர் தகவல்
ADDED : ஜூலை 07, 2024 11:29 PM
தேவகோட்டை: தேவகோட்டை தோட்டக்கலை பண்ணையில் எலுமிச்சை, மா, பலா கன்றுகள் உற்பத்தி செய்து மானிய விலையில் அனைவருக்கும் வழங்கப்படுகிறது என உதவி இயக்குனர் சத்யா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இங்குள்ள பண்ணையில் குறைந்த நீர் தேவையுள்ள அதிக விளைச்சல் தரும் மரக்கன்றுகள், பழச்செடிகள் வளர்க்கப்படுகின்றன. பரப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழ் வீரிய ஒட்டு ரக தக்காளி, கத்தரி நாற்று, மா, கொய்யா, பலா, எலுமிச்சை கன்றுகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
பேரீச்சை சாகுபடியை ஊக்குவிக்க மானியம் அறிவித்துள்ளனர்.
இரண்டரை ஏக்கருக்கு மேல் தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்ய ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். நடப்பாண்டில் வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு உட்பட்ட திடக்கோட்டை, தளக்காவயல், உருவாட்டி, சிறுநல்லூர், சண்முகநாதபுரம், சருகணி, திராணி, நாச்சாங்குளம், கண்ணங்குடி அருகே புத்தூரணி, கங்கணி, கே.சிறுவனூருக்கு முன்னுரிமை தரப்படும்.