ADDED : ஜூலை 01, 2024 06:13 AM
தேவகோட்டை, : கண்ணங்குடி வட்டார வேளாண்மை துறை சார்பில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் கண்ணங்குடி பகுதியில் பசுந்தாள் உரவிதை விநியோக விழா கண்ணங்குடி ஒன்றிய தலைவர் சரவண மெய்யப்பன் தலைமையில் நடந்தது.
சிவகங்கை மத்திய திட்ட ஆலோசகர் கண்ணன் மற்றும் ஒன்றிய தவைவருடன் கண்ணங்குடி பகுதியில் கோடை உழவு பணிகளை பார்வையிட்டார். தக்கை பூண்டு விதைகள், பசுந்தாள் உர விதைகள் பயன்கள் பற்றியும், விவசாய உற்பத்தி அதிகரிக்க வழிமுறைகள் பற்றியும் திட்ட ஆலோசகர் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
ஒன்றிய தலைவர் சரவண மெய்யப்பன் பசுந்தாள் உர விதைகள் வழங்கினார். வேளாண் உதவி இயக்குநர் பொறுப்பு காளிமுத்து, உதவி வேளாண் அலுவலர்கள் பிரேமலதா, நவநீதகிருஷ்ணன், அந்தோணி, அட்மா திட்ட அலுவலர்கள் சூர்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர் சதீஷ் குமார் பங்கேற்றனர்.