நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கையில் பென்ஷனர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். கருவூலக இயக்குனரக (ஓய்வூதியம்) கணக்கு அலுவலர் அருள் முன்னிலை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட கருவூலக அலுவலர் எஸ்.கண்ணன், கலெக்டர் பி.ஏ., (கணக்கு) சாந்தகுமாரி உட்பட மாவட்ட அளவில் உதவி கருவூலக அலுவலர், அனைத்து துறை பென்ஷனர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பென்ஷன் வழங்குவதில் உள்ள பிரச்னையை தவிர்க்க வேண்டும். அகவிலைப்படி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.