/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிக்கு பூமி பூஜை
/
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிக்கு பூமி பூஜை
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிக்கு பூமி பூஜை
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிக்கு பூமி பூஜை
ADDED : பிப் 27, 2025 01:01 AM

சிவகங்கை; சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் ஒரு பகுதியை  ரூ.2 கோடியில் புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் ஒரு பகுதியில் விரிவாக்கப் பணிக்காக 2024 =-25ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடி, மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கப்பட்டு விரிவாக்கப் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், எம்.பி.,கார்த்தி பூஜையை துவக்கி வைத்தனர். நகராட்சி தலைவர் துரைஆனந்த், கமிஷனர் கிருஷ்ணராம், கவுன்சிலர்கள் ராமநாதன், சரவணன், விஜயகுமார்  கலந்து கொண்டனர்.
இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணியில் திருப்புத்துார், மதுரை செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் மேற்கூரை, சிமென்ட் கான்கிரீட் தளம், நுழைவுவாயில், பெயர் பலகை, மின் விளக்குகள், சுற்றுச்சுவர், பயணிகள் நிழற்குடை, சிறுநீர் கழிப்பிடம், கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
ஏற்கனவே சிவகங்கை பஸ் ஸ்டாண்டின் மற்றொரு பகுதியான காளையார்கோவில், மானாமதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில் முதல் கட்ட விரிவாக்கப்பணி 2023 மார்ச்சில் ரூ.1.95 கோடியில் தொடங்கி கடந்த மாதம் பணி  முழுமை பெறாமல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
பஸ் ஸ்டாண்டிற்குள் 18 கடைகள், தரைதளம், கழிப்பிடம் உள்ளிட்ட பணிகள் நடந்துள்ளது. கடைகளை சிவகங்கை வந்த தமிழக முதல்வர் திறந்து வைத்தும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
பல கட்டங்களாக  பஸ் ஸ்டாண்டில் விரிவாக்கம் என்ற பெயரில் பணி மேற்கொள்வதற்கு பதிலாக இது வரை செலவழித்த தொகைக்கு புதிய பஸ் ஸ்டாண்டே கட்டியிருக்கலாம் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

