ADDED : மே 16, 2024 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : திருப்புவனம் தாலுகாவில் குரூப் 4 தேர்வு நடைபெறும் மையங்களில் உள்ள வசதி குறித்து தாசில்தார் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்புவனம் தாலுகாவில் கடந்தாண்டு பூவந்தி, மடப்புரம், பொட்டப்பாளையம் உள்ளிட்ட 15 மையங்களில் நான்காயிரத்து 850 பேர் தேர்வு எழுதினர்.
இந்தாண்டு ஜூன் 9ம் தேதி தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அரசு பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
இதனையொட்டி திருப்புவனம் பகுதியில் உள்ள மையங்களில் கழிப்பறை, பேன், குடிநீர் வசதி, கேள்வித்தாள் வைக்க பாதுகாப்பு வசதி, தேர்வாளர்கள் வந்து செல்ல உரிய வசதி குறித்து தாசில்தார் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் தங்கப்பாண்டியன் ஆய்வு மேற்கொண்டனர்.