ADDED : ஜூலை 05, 2024 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெற்குப்பை: ஆ. தெக்கூர் சிங்கை சித்தர் அய்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் உமா வரவேற்றார். தலைவர் சந்திரசேகர், தாளாளர் செந்தில் குமார் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி ஆங்கிலத் துறை பேராசிரியர் சுரேஷ்,பள்ளத்தூர் சீதா லெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி முன்னாள் முதல்வர் நாகேஸ்வரி பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு மேற்கல்வி, வேலைவாய்ப்பு குறித்து விளக்கினர். மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது.