/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் மே 21ல் வழிகாட்டி நிகழ்ச்சி
/
காரைக்குடியில் மே 21ல் வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : மே 19, 2024 05:32 AM
சிவகங்கை : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லுாரி கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மே 21ல் காரைக்குடி அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழா அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
இளைஞர்கள் படிப்பில் அறிவில், சிந்தனையில்,ஆற்றலில், திறமையில், சிறந்து விளங்கிட வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு அவர்களின்தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பதோடு, அவர்கள் அடுத்தடுத்து என்னபடிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படி படிக்கலாம் என்பதை வழிகாட்ட தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் என் கல்லுாரி கனவு எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டத்தின் கீழ் 2023---24ஆம் கல்வியாண்டிற்கான பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் தொடர்பான வழிகாட்டி இரண்டாம் கட்டஆலோசனை முகாம், தன்னார்வ இயக்கத்தின் துணையுடன் மே.21 காலை 10:00 மணியளவில் காரைக்குடி அழகப்பாபல்கலை பட்டமளிப்பு விழா அரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாணவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்றார்.

