/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோடை வெயிலால் உளுந்து விளைச்சல் பாதிப்பு
/
கோடை வெயிலால் உளுந்து விளைச்சல் பாதிப்பு
ADDED : மே 05, 2024 04:45 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் கோடை வெயிலால் உளுந்து விவசாயம் கடுமையாக பாதித்துள்ளது.
இத்தாலுகாவில் பிரான்மலை, ஒடுவன்பட்டி, எஸ்.புதுார், செட்டிகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் உளுந்து பயிரிட்டுள்ளனர். கடுமையான வெயில் காரணமாக செடிகள் வளர்ச்சி இல்லாமல் சுருங்கி போய் உள்ளது. இந்தாண்டு உளுந்து விளைச்சல் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.
ரமேஷ், விவசாயி : 45 நாட்களுக்கு முன்பு உளுந்து விதைத்தோம். தற்போது ஒரு அடிவரை வளர்ந்திருக்க வேண்டும், ஆனால் அரை அடி மட்டுமே செடி வளர்ந்து அதற்குள் பூத்தும் விட்டது. இதனால் பயிர் விளைச்சல் இல்லாமல் சோடை போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை தவிர கடுமையான வெயில் காரணமாக மஞ்சள் நோய் தாக்குதலும் செடிகளில் பரவலாக உள்ளது. இந்த ஆண்டு கடுமையான வெயிலால் உளுந்து விவசாயம் விவசாயிகளை ஏமாற்றி விட்டது என்றார்.