/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்லாப்பெட்டி சாவி வைத்திருந்தும் தொகுதிக்கு எதுவும் செய்யாதவர் நாம் தமிழர் எழிலரசி குற்றச்சாட்டு

ADDED : ஏப் 10, 2024 05:54 AM
சிங்கம்புணரி : இந்தியாவின் கல்லாப்பெட்டி சாவியை கையில் வைத்திருந்தும் ப.சிதம்பரம் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி குற்றம் சாட்டினார்.
சிவகங்கை லோக்சபா தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் எழிலரசி சிங்கம்புணரி பகுதியில் பிரசாரம் செய்தார். பஸ் ஸ்டாண்ட் முன் அவர் பேசியதாவது, கடந்த 40 ஆண்டுகளாக வெற்றி பெற்று முக்கிய அமைச்சர் பதவிகளில் இருந்தும் ப.சிதம்பரமும் அவரது மகன் கார்த்தியும் இத்தொகுதிக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை.
இந்தியாவின் கல்லாப்பெட்டி சாவியே ப.சிதம்பரத்திடம் தான் இருந்தது. அவர் நினைத்திருந்தால் இத்தொகுதியை பல வழிகளில் முன்னேற்றி இருக்கலாம். கார்த்தி லண்டன்வாழ் இந்தியர். இன்று என்ன படம் பார்க்கலாம், நாளை என்ன படம் பார்க்கலாம் என்று சமூக ஊடகத்தில் பேசிக் கொண்டிருப்பார்.
அத்திப்பூத்தாற்போல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொகுதிக்கு வருவார். இத்தொகுதி மக்கள் வேலையில்லாமல் வெளிநாடுகளுக்கு சென்று கஷ்டப்படுகிறார்கள்.
அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் விவசாய தொழிற்சாலை கொண்டு வரவும் ப.சிதம்பரமும், அவரது மகனும் எதுவும் செய்யவில்லை என்றார்.