நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரையில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் 2 மாதங்களுக்குப் பிறகு கனமழை பெய்து வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சிக்குள்ளாகினர்.
கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. நேற்று மானாமதுரை பகுதியில் மதியம் 3:30 மணிக்கு பெய்ய துவங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழையாக பெய்ததால் ரோடுகளிலும்,தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.