/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மஞ்சுவிரட்டு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மஞ்சுவிரட்டு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : பிப் 26, 2025 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே விஸ்வநாதபுரம் தங்கசாமி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
விஸ்வநாதபுரத்தில் பிப்.28ல் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி, பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
அதற்கேற்ப அரசிதழில் விஸ்வநாதபுரத்தை இடம்பெறச் செய்து அறிவிப்பு வெளியிடக்கோரி கால்நடைத்துறை செயலர், இயக்குனர், கலெக்டர், எஸ்.பி.,க்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.