/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குப்பைக் கிடங்கு அருகே குடிநீர் கிணறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : ஆக 20, 2024 07:17 AM
மதுரை : சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அரசு சோமன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
காரைக்குடி மாநகராட்சி, தேவகோட்டை நகராட்சி பகுதி குப்பைகளை காரைக்குடி செஞ்சை பகுதியில் குவிக்கின்றனர். அருகில் ஆழ்துளை கிணறு உள்ளது. அதிலிருந்து காரைக்குடி வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மாசடைந்த ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: பெங்களூருவிலுள்ள மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தென்மண்டல அதிகாரி குப்பைக் கிடங்கு, ஆழ்துளை கிணறு மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்து செப்.,20 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.