/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மஞ்சுவிரட்டு அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மஞ்சுவிரட்டு அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : பிப் 28, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அரியகுறிச்சி மகேந்திரன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
அரியகுறிச்சியில் கோயில் திருவிழாவையொட்டி மார்ச் 15 ல் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி, பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி கால்நடைத்துறை செயலர், கலெக்டர், எஸ்.பி.,க்கு மனு அனுப்பினேன். அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் 2 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.