ADDED : ஜூலை 05, 2024 11:48 PM

சிவகங்கை: சிவகங்கையில் நேற்று மாலை பலத்த இடி, மின்னலுடன் ஐஸ்கட்டி மழை பெய்தது.
சிவகங்கையில் நேற்று மதியம் வரை கடும் வெயில் தாக்கியது. ரோட்டில் வாகனங்களே செல்ல முடியாத வகையில் உஷ்ணம் அதிகரித்து காணப்பட்டது. மக்களும் கடும் புழுக்கத்துடன் தவித்தனர்.
கோடை உஷ்ணத்தை தணிக்கும் விதத்தில் நேற்று மாலை 4:45 மணிக்கு சிவகங்கையில் பலத்த இடி, மின்னலுடன் ஐஸ் கட்டி மழை பெய்தது. மாலை 5:30 மணி வரை இம்மழை நீடித்தது. படிப்படியாக மழை குறைய தொடங்கியது. நகரில் மின்தடை ஏற்பட்டது.
மானாமதுரை: மானாமதுரை அருகே கால்பிரபு, பீசர்பட்டினம், இடைக்காட்டூர், முத்தனேந்தல், கிருங்காக்கோட்டை, கொம்புக்காரனேந்தல், மேட்டுமடை, கட்டிக்குளம், மிளகனுார், ராஜகம்பீரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் கோடை விவசாயமாக நெல் பயிரிட்டுள்ள நிலையில் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
நேற்று மாலை 5:00 மணிக்கு பெய்ய துவங்கிய மழை ஒரு மணி நேரம் பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சிக்குள்ளாகினர்.