/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அனுமதிக்கப்பட்ட பஸ் சேவை செயல்படுத்த ஐகோர்ட் உத்தரவு
/
அனுமதிக்கப்பட்ட பஸ் சேவை செயல்படுத்த ஐகோர்ட் உத்தரவு
அனுமதிக்கப்பட்ட பஸ் சேவை செயல்படுத்த ஐகோர்ட் உத்தரவு
அனுமதிக்கப்பட்ட பஸ் சேவை செயல்படுத்த ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஏப் 10, 2024 05:56 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே கீழச்சிவல்பட்டி, மலையடிப்பட்டி கிராமங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பஸ் சேவையை நான்கு மாதங்களுக்குள் செயல்படுத்த மதுரை ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருப்புத்துார் ஒன்றியம் கீழச்சிவல்பட்டி மற்றும் மலைக்கடிப்பட்டி கிராமத்தில் 24 மணி நேரமும் பஸ் வசதி இருந்தது. கிராமங்களுக்கு அருகில் திருமயம் --- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை வந்த பின்னர் இந்த பஸ் வசதி குறைந்து விட்டது. பெரும்பாலான பஸ்கள் புறவழிச்சாலையில் செல்லத் துவங்கின.
தினசரி 20 முறை அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை- தஞ்சாவூர் பஸ்கள் இக்கிராமத்திற்கு வந்து சென்றன. தற்போது ஒரு முறை கூட கிராமத்திற்குள் வருவதில்லை. கிராமங்களுக்கு வெளியே 2 கி.மீ.துாரத்தில் உள்ள சந்திப்பிலேயே நின்று செல்கின்றன. இதனால் இப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த வக்கீல் முருகேசன் மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2018 ல் இரு கிராமங்களுக்கும் அனுமதிக்கப்பட்ட பஸ் சேவையை செயல்படுத்த கோரி மனுச் செய்திருந்தார்.
இறுதி விசாரணைக்குப் பின் தலைமை நீதிபதி சஞ்சய் வி. கங்காபுர்வாலா தனது உத்தரவில் 'நான்கு மாதங்களுக்குள் அரசு போக்குவரத்துக் கழகத்தின் பஸ் வழித்தடங்களில் இக்கிராமங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பஸ் சேவைகளை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

