/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அமைக்கப்படுமா ஊரணிகளை துாரெடுத்து ஆழ்துளை கிணறு வறட்சி காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும்

ADDED : மே 04, 2024 05:16 AM

தேவகோட்டை: தேவகோட்டை நகரில் உள்ள ஊரணிகளை துாரெடுத்து ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தேவகோட்டையில் 18 ஊரணிகள் உள்ளன. பெரும்பாலான ஊரணிகள் வறண்டு வெறும் தரையாக காட்சியளிக்கிறது. சில ஊரணிகளில் குறைந்த அளவு தண்ணீர் இருந்தாலும் கழிவு நீராகவும், புதர் மண்டி காணப்படுகிறது.
தேவகோட்டை நகரில் சிவன்கோவில் ஊரணி , கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஊரணிகளில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு எப்போதும் ஊரணியில் தண்ணீர் தேங்கி நிற்குமாறு நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்
தேவகோட்டை நகராட்சி சார்பில் , அழகப்பா பூங்கா ஊரணி, காட்டூரணி, பெருமாள் கண்மாய் ஊரணி ஆகிய மூன்று ஊரணிகள் துார்வாரப்பட்டு நடைபாதை பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. அழகப்பா பூங்கா ஊரணியில் ஏற்கனவே ஆழ்துளை கிணறு போடப்பட்டுள்ளது. இதே போல அனைத்து ஊரணிகளிலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்க மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். முதல் கட்டமாக துார்வாரி , வறண்டு போன காட்டூரணி, பெருமாள் கண்மாய் ஊரணிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும். கட்டாந்தரையாக காணப்படும் ஊரணியில் தண்ணீர் இல்லாததால் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.
தேவகோட்டை பகுதியை பொறுத்தவரை பருவமழை பெய்தால் தான் ஊரணிகளுக்கு தண்ணீர் வர வாய்ப்பு.
வறட்சி நிவாரண பணியாக இரண்டு ஊரணிகளிலும் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். மேலும் படிப்படியாக நகரில் உள்ள ஊரணிகளையும் சுத்தம் செய்து நடைபாதை அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.