/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி ரோடு விரிவாக்கப்பணி எச்சரிக்கை அறிவிப்பு இல்லாததால் அச்சம்

ADDED : ஆக 15, 2024 04:43 AM

இளையான்குடி : இளையான்குடி அருகே தாயமங்கலம் ரோட்டை விரிவுபடுத்தும் பணி நடக்கிறது.
இங்கு எச்சரிக்கை அறிவிப்பு பலகை இல்லாமல் பணி செய்வதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சிவகங்கையிலிருந்து இளையான்குடி செல்லும் ரோட்டில் தாயமங்கலத்திற்கு அருகே தச்சனேந்தல் பகுதியிலிருந்து இளையான்குடி வரை ரோட்டின் இருபுறமும் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியில் மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் லாரிகள் மற்றும் ஆட்கள் வேலைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.பணி நடைபெறும் இடங்களில் ஆட்கள் வேலை செய்கிறார்கள் என்ற எச்சரிக்கை அறிவிப்பு பலகை இல்லாமல் வேலை நடக்கிறது.
வாகன ஓட்டிகள் கூறியதாவது: தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. கோயிலுக்கு ஏராளமான வாகனங்கள் இந்த ரோட்டின் வழியாக சென்று வரும் நிலையில் தற்போது ரோட்டை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பணி நடைபெறும் இடங்களில் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தினர், ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கை அறிவிப்பு பலகை இல்லாமல் பணியை செய்து வருவதால் அச்சத்திற்குள்ளாகி வருகிறோம். பணி நடைபெறும் இடங்களில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.