/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செயல்பாட்டிற்கு வந்த இளையான்குடி புதிய பஸ் ஸ்டாண்ட்
/
செயல்பாட்டிற்கு வந்த இளையான்குடி புதிய பஸ் ஸ்டாண்ட்
செயல்பாட்டிற்கு வந்த இளையான்குடி புதிய பஸ் ஸ்டாண்ட்
செயல்பாட்டிற்கு வந்த இளையான்குடி புதிய பஸ் ஸ்டாண்ட்
ADDED : ஜூலை 04, 2024 01:31 AM

இளையான்குடி: தினமலர் செய்தி எதிரொலியாக இளையான்குடியில் நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதிதாக கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட் நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது.
இளையான்குடி பேரூராட்சி பஸ் ஸ்டாண்ட் அரசு மருத்துவமனை அருகே குறுகிய இடத்தில் செயல்பட்டது. இங்கு போதிய இட வசதி இல்லாததால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இளையான்குடி சிவகங்கை ரோட்டில் புதிதாக இடம் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 3.75 கோடி செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நடைபெற்றது. கடந்த பிப்ரவரியில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.திறந்து வைக்கப்பட்டு 4 மாதங்களாகியும் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வராமல் இருப்பது குறித்து நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
நேற்று முதல் இளையான்குடி புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து அனைத்து ஊர்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இளையான்குடி பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் கூறியதாவது: புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள கடைகளுக்கு விரைவில் டெண்டர் நடத்தப்பட்டு உடனடியாக கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லும் பஸ்கள் மக்கள் வசதிக்காக பழைய பஸ் ஸ்டாண்டிற்கும் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புது பஸ் ஸ்டாண்டிலிருந்து பழைய பஸ் ஸ்டாண்டிற்கு மினி பஸ்கள் அடிக்கடி இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மக்களின் பாதுகாப்பு வசதிக்காக போலீஸ் அவுட்போஸ்ட் ஏற்படுத்தப்பட்டு 10க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விரைவில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சைக்கிள் மற்றும் டூவீலர் ஸ்டாண்ட் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.