/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இயக்க ஆள் இல்லாமல் பேட்டரி வாகனங்கள் முடக்கம்; மீண்டும் கைவண்டிக்கு மாறிய தொழிலாளர்கள்
/
இயக்க ஆள் இல்லாமல் பேட்டரி வாகனங்கள் முடக்கம்; மீண்டும் கைவண்டிக்கு மாறிய தொழிலாளர்கள்
இயக்க ஆள் இல்லாமல் பேட்டரி வாகனங்கள் முடக்கம்; மீண்டும் கைவண்டிக்கு மாறிய தொழிலாளர்கள்
இயக்க ஆள் இல்லாமல் பேட்டரி வாகனங்கள் முடக்கம்; மீண்டும் கைவண்டிக்கு மாறிய தொழிலாளர்கள்
ADDED : மார் 30, 2024 05:57 AM

சிங்கம்புணரி, ; சிங்கம்புணரி பேரூராட்சியில் பேட்டரி வாகனங்களை இயக்கத் தெரிந்தவர்கள் பற்றாக்குறையால், துப்புரவு பெண் தொழிலாளர்கள் மீண்டும் கைவண்டிக்கு மாறி அவதிப்படுகின்றனர்.
இப்பேரூராட்சியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் வீடுகளில் இருந்து குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து கிடங்கிற்கு கொண்டு செல்ல 16 மூன்று சக்கர பேட்டரி வண்டிகளும், ஒரு மினி வேனும் வாங்கப்பட்டது. இந்த வண்டிகள் பல மாதங்களாக இயக்கப்படாமல் அலுவலகம் முன்பாக பூட்டி வைக்கப்பட்டிருந்தது.
சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அனைத்து வாகனங்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. வாகனங்களை துப்புரவு ஆண் தொழிலாளர்கள் இயக்கினர்.
பெண் தொழிலாளர்களுக்கு வாகனங்களை இயக்க தெரியாததால் அவர்கள் உடன் சென்று குப்பைகளை சேகரித்தனர். இந்நிலையில் நகரில் 18 வார்டுகளிலும் கால்வாய்களில் குப்பை, கழிவுநீர் தேங்குவதால் ஆண் தொழிலாளர்கள் அப்பணிக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால் பேட்டரி வாகனங்களை இயக்குவதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பெண் தொழிலாளர்கள் மீண்டும் கைவண்டிகளை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் தெருக்களில் கை வண்டியில் குப்பைகளை தள்ளி கஷ்டப்படுகின்றனர். பேட்டரி வண்டிகள் இருந்தும் அவற்றை ஓட்டத் தெரிந்தவர்கள் இல்லாததால் துப்புரவு பெண் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். எனவே அனைத்து வாகனங்களையும் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், இவ்வாகனங்களை இயக்கத் தெரிந்தவர்களை தற்காலிகமாக நியமித்து நிலைமையை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அதிகாரிகள் கூறும்போது, 'பெண் தொழிலாளர்களுக்கு வாகனங்கள் ஓட்ட தெரியவில்லை, விரைவில் அவர்கள் வாகனங்களை இயக்க பழக்கப்படுத்தப்பட்டு அனைத்து வாகனங்களும் இயக்கப்படும்' என்றனர்.

