/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் பூக்கள் விலை கிலோ ஆயிரத்தை தாண்டியது
/
காரைக்குடியில் பூக்கள் விலை கிலோ ஆயிரத்தை தாண்டியது
காரைக்குடியில் பூக்கள் விலை கிலோ ஆயிரத்தை தாண்டியது
காரைக்குடியில் பூக்கள் விலை கிலோ ஆயிரத்தை தாண்டியது
ADDED : செப் 07, 2024 05:26 AM

காரைக்குடி: காரைக்குடியில் மல்லிகை மட்டுமின்றி பிச்சி, முல்லைப்பூ கிலோ ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் முகூர்த்த நாட்கள் மற்றும் திருவிழா காலங்களில் பூக்கள் மற்றும் காய்கறிகளின் விலை பல மடங்கு அதிகரிக்கும். தொடர் முகூர்த்த நாட்களையொட்டியும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் பூக்களின் விலை அதிகரிக்க தொடங்கியது.
மல்லிகை கிலோ ரூ.500 க்கும் முல்லை கிலோ ரூ.300க்கும் விற்கப்பட்ட நிலையில் தற்போது முகூர்த்தம் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மல்லிகை மட்டுமின்றி பிச்சி முல்லை பூ கிலோ ரூ.ஆயிரத்துக்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.
வியாபாரிகள் கூறுகையில், தற்போது தொடர் முகூர்த்த நாட்கள் என்பதால் பூக்களின் வரத்து குறைவாகவே உள்ளது. விலையும் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதால் மல்லிகை உட்பட பூக்களின் விலை கிலோ ரூ. ஆயிரத்தை எட்டியுள்ளது.